தளபதி விஜய்யின் கோட்: வட அமெரிக்கா, ஐரோப்பிய திரையரங்கு உரிமத்தை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

தளபதி விஜய்யின் கோட்: வட அமெரிக்கா, ஐரோப்பிய திரையரங்கு உரிமத்தை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (கோட்) படத்தின் வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் வட அமெரிக்க வெளியீட்டை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நேரடியாகவும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வெளியீட்டை அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்தும் வெளியிட உள்ளது. செப்டம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளதால் வெளிநாட்டு தமிழ் மற்றும் இந்திய சினிமா ரசிகர்களிடையே படத்திற்கான டிக்கெட் எதிர்பார்ப்பு இப்போதே சூடுபிடித்துள்ளது. கடந்த காலங்களில் விஜய்யின் படங்களுக்கு வெளிநாடுகளில் கிடைத்த பெரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, இம்முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரையிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

· Hamsinient

பழைய செய்திகள்