செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது கோட் திரைப்படம்: தளபதி விஜய்யின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. வரும் மாதங்களில் அடுத்தடுத்து பாடல்களும் டீசரும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்ட வெளியீட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
· AGS Entertainment