தளபதியுடன் இளையதளபதி இணையும் கோட் செகண்ட் லுக்: புதிய ஆக்‌ஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

தளபதியுடன் இளையதளபதி இணையும் கோட் செகண்ட் லுக்: புதிய ஆக்‌ஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் பிரம்மாண்ட செகண்ட் லுக் போஸ்டரை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தளபதியுடன் இளையதளபதி இணையும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த போஸ்டரில் முதிர்ந்த தோற்றத்தில் ஒரு விஜய்யும், இளமையான தோற்றத்தில் மற்றொரு விஜய்யும் இருசக்கர வாகனத்தில் பறந்து துப்பாக்கியால் சுடும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் தயாராகி வருவதை இந்த போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சண்டையும் வேகமான பயணமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் இந்த புதிய தோற்றங்கள் இணையத்தில் வைரலாகி உலகளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· AGS Entertainment

பழைய செய்திகள்