பொங்கலுக்கு அமெரிக்காவில் தளபதி விஜய் ஆட்டம்: ஜனவரி 8ல் ஜன நாயகன் பிரீமியர் தொடக்கம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் அமெரிக்கா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. பிரைம் மீடியா மற்றும் நர்மதா மீடியா நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை அமெரிக்காவில் திரையிடுவதாகவும், வரும் ஜனவரி 8 அன்று பிரீமியர் காட்சிகள் தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத்தின் இசை ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அரசியலும் மக்கள் சக்தியும் கலந்த இந்த படைப்பு விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திரை விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் ஜனவரி 8 முதலே பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளதால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர். திரையரங்கு முன்பதிவு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
· Primemediaus