லியோ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்: அக்டோபர் 19-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!
தளபதி விஜய் நடிப்பில் உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'லியோ' திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த தகவலை படக்குழுவும் சோனி மியூசிக் நிறுவனமும் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படம் குடும்பத்துடன் அனைவரும் திரையரங்குகளில் கண்டுகளிக்கும் வகையில் யு/ஏ சான்றிதழுடன் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் 19-ஆம் தேதி உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை பணிகள் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை மேலும் கூட்டியுள்ளது.
· Sony Music South