பிறந்தநாள் பரிசாக வெளியான தளபதி விஜய்யின் லியோ ஃபர்ஸ்ட் லுக்: இணையத்தில் வெடித்த கொண்டாட்டம்!

பிறந்தநாள் பரிசாக வெளியான தளபதி விஜய்யின் லியோ ஃபர்ஸ்ட் லுக்: இணையத்தில் வெடித்த கொண்டாட்டம்!

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த 'லியோ' திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சோனி மியூசிக் சவுத் மற்றும் படக்குழுவினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்த மாஸான போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கையில் ரத்தம் தோய்ந்த சுத்தியலுடன், பின்னணியில் சீறும் பனி ஓநாய் உருவத்துடன் விஜய் தோன்றும் போஸ்டர் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில நொடிகளிலேயே உலகளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் சாதனைகளைப் படைத்து வருகிறது.

· Sony Music South

பழைய செய்திகள்