ஐமேக்ஸ் திரைகளில் லியோ ஆக்ஷன்: பிரம்மாண்ட பார்மட்டில் களமிறங்கும் தளபதி விஜய்!
அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம், பிரம்மாண்டமான ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா ஐமேக்ஸ் லோகோவுடன் கூடிய அனல் பறக்கும் புதிய போஸ்டரைப் பகிர்ந்து இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடித் திரைப்படம், ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கேற்ற வகையில் காட்சி மற்றும் ஒலித் தரத்துடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பனிச்சரிவு சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள் மற்றும் அனிருத்தின் அதிரடி பின்னணி இசை ஆகியவை ஐமேக்ஸ் திரைகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு தரமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் லியோ படத்தின் ஐமேக்ஸ் காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்து வருகின்றன.
· Gopiprasannaa