அமைதியாக இருங்கள் போரைத் தவிருங்கள்: வெளியானது தளபதி விஜய்யின் லியோ தெலுங்கு போஸ்டர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கு போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விநியோகஸ்தரான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் புதிய போஸ்டரைப் பகிர்ந்து, அமைதியாக இருங்கள் போரைத் தவிருங்கள் என்ற வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளது. பனிபடர்ந்த பின்னணியில் விஜய் தோன்றும் இந்த மிரட்டலான போஸ்டர் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிருத்தின் இசை மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு மாநிலங்களிலும் மிகப் பெரிய வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்களிடையேயும் லியோ படத்திற்கான ஆர்வம் உச்சத்தில் உள்ளது. பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு வரும் படக்குழுவினர், அக்டோபர் 19 திரைக்கு வரவுள்ள லியோ படத்திற்கான விளம்பரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
· Hamsinient