உலகளவில் ரூ.200 கோடி வசூலை வாரிக்குவித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக ஒன்லி கோலிவுட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு திரையரங்குகளை மீண்டும் உயிர்ப்பித்த பெருமை இப்படத்திற்குச் சேர்ந்துள்ளது. ஜேடி என்ற கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய்யின் ஸ்டைலும், பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் அசுர நடிப்பும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அலைகடலென வரவழைத்தது. அனிருத்தின் துள்ளலான இசை மற்றும் மாஸ்டர் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வசூலை விறுவிறுவென உயர்த்தின. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம், அடுத்ததாக ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இதன் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
· Only Kollywood