தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்: மிரட்டலான 'சர்கார்' செகண்ட் லுக் வெளியானது!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்: மிரட்டலான 'சர்கார்' செகண்ட் லுக் வெளியானது!

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 'சர்கார்' திரைப்படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நேற்று மாலை ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நள்ளிரவில் இந்த செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செகண்ட் லுக்கில் விஜய்யின் தோற்றம் அரசியல் மற்றும் சமூகப் பின்னணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள 'சர்கார்' படத்தின் இந்த பிறந்தநாள் போஸ்டர்கள் இணையத்தில் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளன.

· Sun Pictures

பழைய செய்திகள்