பிரதீப் குமார் குரலில் 'தாமரை' பாடல்: 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை!

பிரதீப் குமார் குரலில் 'தாமரை' பாடல்: 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை!

சமய முரளி இயக்கத்தில் உருவாகி வரும் 'எனமி ஆஃப் தி ஸ்மக்லர்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலான 'தாமரை' யூடியூபில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இசை பிரியர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இளம் இசையமைப்பாளர் சாம் டேனியல் இசையமைப்பில் உருவான இப்பாடலை பிரபல முன்னணி பாடகர் பிரதீப் குமார் தனது மெல்லிய குரலால் பாடியுள்ளார். இயக்குனர் சமய முரளியே எழுதியுள்ள ஆழமான காதல் வரிகளுக்கு பிரதீப் குமாரின் பாடும் விதம் மேலும் அழகு சேர்த்துள்ளது. நடிகர் சரண், ஜே.டி. சக்ரவர்த்தி, லால் மற்றும் ராதிகா சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடலாக வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திரைத்துறை மக்கள் தொடர்பாளர் கயல் தேவராஜ் இந்த சாதனைத் தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பாடலின் மாபெரும் வெற்றி படத்தின் மீதான கவனத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்