தயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதன்: அஷ்வத்துக்கு பதில் தருண் பாஸ்கர்!

தயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதன்: அஷ்வத்துக்கு பதில் தருண் பாஸ்கர்!

'கோமாளி' மற்றும் 'லவ் டுடே' வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குநராகவும் நடிகராகவும் முத்திரை பதித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களம் இறங்குகிறார். இப்படத்தில் 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பெண்களை மையமாகக் கொண்ட சுவாரசியமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அவருக்குப் பதிலாக தெலுங்கு இயக்குநர் மற்றும் நடிகரான தருண் பாஸ்கர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுமையான யோசனைகளுடன் தனது முதல் தயாரிப்பைத் தொடங்கியுள்ள பிரதீப் ரங்கநாதனின் இம்முயற்சிக்குத் திரை வட்டாரத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

· @_movietamil

பழைய செய்திகள்