பிரைம் வீடியோவில் கலக்கும் தி டார்க் ஹெவன்: டாப் 4 இடத்தில் ட்ரெண்டிங்

பிரைம் வீடியோவில் கலக்கும் தி டார்க் ஹெவன்: டாப் 4 இடத்தில் ட்ரெண்டிங்

மர்மமும் பரபரப்பும் நிறைந்த க்ரைம் திரில்லர் திரைப்படமாக வெளியான தி டார்க் ஹெவன், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் டிராமா திரைப்படப் பிரிவில் டாப் 4 இடங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வெற்றிகரமான தகவலை திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏபிஐ பிலிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. இப்படத்தில் சித்து, பாலாஜி, சக்தி பாலாஜி, தர்ஷிகா மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை ரித்விகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித மனங்களின் விவரிக்க முடியாத இருண்ட ரகசியங்களையும், எதிர்பாராத குற்றப் பின்னணியையும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியுள்ள விதம் ஓடிடி ரசிகர்களிடையே சிறப்பான கவனத்தைப் பெற்றுள்ளது. தியேட்டர்களில் வெளியானபோது அமைதியாகக் கடந்துபோன பல நல்ல திரைப்படங்கள் ஓடிடியில் பெருவெற்றி பெறுவது வழக்கம். அந்த வகையில் தி டார்க் ஹெவன் திரைப்படம் த்ரில்லர் மற்றும் மிஸ்ட்ரி பிரியர்களுக்கு இந்த வார விடுமுறையில் சிறந்த தேர்வாக மாறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

· Apifilms

பழைய செய்திகள்