அமேசான் பிரைமில் கலக்கும் 'தி டார்க் ஹெவன்': இந்திய அளவில் டாப் 8 பட்டியலில் தொடர்ந்து சாதனை!
ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் இரண்டாவது வாரத்தைக் கடந்தும் பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வருகிறது. இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் டாப் 8 திரைப்படங்கள் பட்டியலில் இப்படம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக திரைப்பட விமர்சகர் கயல் தேவராஜ் தெரிவித்துள்ளார். பாலாஜி இயக்கத்தில் சித்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களமும் சுவாரசியமான காட்சிகளும் ஓடிடி ரசிகர்களைக் வெகுவாகக் கவர்ந்துள்ளன. தியேட்டர்களைத் தொடர்ந்து டிஜிட்டல் தளத்திலும் இப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் பாராட்டு பெருகி வருகிறது. குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள மர்மமும் சுவாரசியமும் கலந்த திரைக்கதை பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுள்ளது. எந்தவித பெரிய ஆரவாரமும் விளம்பரமும் இல்லாமல் வெளியாகி, உள்ளடக்கத்தின் வலிமையால் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் 'தி டார்க் ஹெவன்' திரைப்படம், ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துத் தொடர்ந்து டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது. வரும் நாட்களிலும் இதன் பார்வை எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj