ஓடிடியில் கலக்கும் தி டார்க் ஹெவன்: இந்திய அளவில் 5வது இடம் பிடித்து சாதனை!

ஓடிடியில் கலக்கும் தி டார்க் ஹெவன்: இந்திய அளவில் 5வது இடம் பிடித்து சாதனை!

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் அஹா தமிழ் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள தி டார்க் ஹெவன் திரைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் 5வது இடத்தைப் பிடித்து அசத்தி வருகிறது. சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோர் நடிப்பில் பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. தமிழில் மட்டுமே வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருவதாக சினிமா பத்திரிகையாளர் கயல் தேவராஜ் பாராட்டியுள்ளார். சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தற்போதைய வார இறுதியில் ஓடிடி பார்வையாளர்களின் முன்னணி தேர்வாக மாறியுள்ள தி டார்க் ஹெவன், வரும் நாட்களிலும் பார்வைகளின் எண்ணிக்கையில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்