புக்கிங்கில் அனல் பறக்கும் 'தி பாரடைஸ்': ஒரே மணி நேரத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படத்திற்கு புக்மைஷோ தளத்தில் ஒரே மணி நேரத்தில் 12,940 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக சினிமா ஆய்வாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் முக்கிய நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருகின்றன. குடும்பங்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து வருவதால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளம் திணறி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளுக்கும் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், வார இறுதி நாட்களைக் கடந்து வார நாட்களிலும் படத்தின் வசூல் வேட்டை குறையாமல் நீடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
· Ursvamsishekar