'தி பாரடைஸ்' படம் எப்படி இருக்கிறது? பலவீனமான திரைக்கதையால் சறுக்குகிறது என விமர்சனம்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் ரசிகர்களைக் கவரத் தவறிவிட்டதாக ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. மலையாளம் ரிவ்யூ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், படம் பார்ப்பதற்கு மிகுந்த சோர்வை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை திரைக்கதையில் எந்தவொரு பிடிப்பும் இல்லை என்றும், அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளும் காதை பிளக்கும் இரைச்சலான இசையும் படத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு மாஸ் பொழுதுபோக்கு திரைப்படமாக விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும், ரசிகர்களைக் கவரும் உறுதியான கொண்டாட்டத் தருணங்கள் இதில் அமையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது இப்படம் எளிதில் மறக்கக்கூடிய ஒன்றாகவே அமைந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

· MalayalamReview

பழைய செய்திகள்