புக்மைஷோவில் வினாடிக்கு வினாடி எகிறும் முன்பதிவு: ஒரே மணி நேரத்தில் 17 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்ற 'தி பாரடைஸ்'!

புக்மைஷோவில் வினாடிக்கு வினாடி எகிறும் முன்பதிவு: ஒரே மணி நேரத்தில் 17 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்ற 'தி பாரடைஸ்'!

பாக்ஸ் ஆபிஸில் புயல் கிளப்பி வரும் 'தி பாரடைஸ்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அபார மோகம் காரணமாக, புக்மைஷோ தளத்தில் ஒரே மணி நேரத்தில் 17,110 டிக்கெட்டுகள் பதிவாகி அதிரடி சாதனை படைத்துள்ளதாக வம்சி சேகர் பதிவிட்டுள்ளார். ஜடலின் அனல் பறக்கும் ஆக்‌ஷன் அவதாரம் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு இழுத்து வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரையரங்குகளில் ஒரு பிரம்மாண்ட திருவிழா அனுபவத்தை வழங்குவதாகப் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து ஆன்லைனில் டிக்கெட்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் காலியாகி வருவதால், கூடுதல் சிறப்புக் காட்சிகளைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்