17 நாட்களில் 100 மில்லியன் பார்வைகள்: தி பாரடைஸ் படத்தின் 'யேஷனகுலா' பாடல் இமாலய சாதனை!
நேச்சுரல் ஸ்டார் நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' திரைப்படத்திலிருந்து வெளியான 'யேஷனகுலா' பாடல் யூடியூபில் வெறும் 17 நாட்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து உலகளாவிய சாதனை படைத்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் யூடியூப் குளோபல் இசைப் பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் நீடித்து வருகிறது. ஜாங்கி ரெட்டி மற்றும் பிரபா இணைந்து பாடியுள்ள இந்த நாட்டுப்புற துள்ளல் பாடல் வரிகளும், சந்தீப் மாஸ்டரின் அசத்தலான நடன அசைவுகளும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் புயலைக் கிளப்பி வருகின்றன. நானி மற்றும் கீர்த்தி சுரேஷின் அபாரமான எனர்ஜி ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட வைக்கும் பாடலாக இது அமைந்துள்ளது. செப்டம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் படைத்து வரும் தொடர் சாதனைகள் படத்திற்கான டிக்கெட் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இசை ரசிகர்களிடையே இந்தப் பாடல் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
· Prosathish