சுனில் குரோவர், மனிஷ் பால் மற்றும் சாம் சி.எஸ் கூட்டணியில் 'தி வான்': முன்பதிவை அறிவித்த பென் மூவிஸ்

சுனில் குரோவர், மனிஷ் பால் மற்றும் சாம் சி.எஸ் கூட்டணியில் 'தி வான்': முன்பதிவை அறிவித்த பென் மூவிஸ்

பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள பிரம்மாண்ட பேண்டஸி திரைப்படமான 'தி வான்' படத்தின் திரையரங்கு முன்பதிவுகள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 25 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு இணைப்பை வெளியிட்டுள்ளது விநியோக நிறுவனமான பென் மூவிஸ். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா முன்னணி வேடங்களில் நடிக்க, சுனில் குரோவர், மனிஷ் பால், ஸ்வேதா திவாரி மற்றும் அனூப் சோனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ், அமித் திரிவேதி, விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்ஸி ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது பலதரப்பட்ட இசைப் பிரியர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. பிரமாண்டமான விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தீபக் குமார் மிஸ்ரா இயக்கியுள்ள இப்படம் குடும்பங்களுடன் திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

· Penmovies

பழைய செய்திகள்