சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்ற 'தியேட்டர்': ஓடிடி தளங்களில் வெளியீடு

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்ற 'தியேட்டர்': ஓடிடி தளங்களில் வெளியீடு

பிரபல மலையாள இயக்குநர் சஜின் பாபு இயக்கத்தில் நடிகை ரீமா கல்லிங்கல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவான கலைப்படைப்பு 'தியேட்டர்: தி மித் ஆஃப் ரியாலிட்டி'. கொல்கத்தா மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல உயரிய விருதுகளை அள்ளிக்குவித்த இந்த படம் உலகளாவிய திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படம் தற்போது சிம்ப்ளி சவுத் (இந்தியா தவிர்த்த உலக நாடுகள்), ஏபி இன்டர்நேஷனல் சவுத் சினிமா மற்றும் மனோரமா மேக்ஸ் ஆகிய முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகி நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. அஞ்சனா பிலிப் மற்றும் பிலிப் சகாரியா ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்தில் ரீமாவின் நடிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யதார்த்தமான சமூக நிகழ்வுகளையும் மனித உணர்வுகளையும் மிக நுட்பமாக விவரிக்கும் இந்த சுயாதீன திரைப்படம் சர்வதேச விருதுகளை தொடர்ந்து தற்போது டிஜிட்டல் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

· Apifilms

பழைய செய்திகள்