இன்று மாலை 4 மணிக்கு தீ தளபதி பாடல் ரிலீஸ்: வாரிசு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது தனிப்பாடலான ‘தீ தளபதி’ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் திரையுலகிற்கு வந்து மூன்று தசாப்தங்கள் நிறைவடைந்ததை போற்றும் வகையில் இப்பாடல் வெளியிடப்படுகிறது. இப்பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் துள்ளலான மெட்டமைக்க, கவிஞர் விவேக் தீப்பொறி பறக்கும் வரிகளை எழுதியுள்ளார். மேலும் முன்னணி நட்சத்திர நாயகன் சிலம்பரசன் டிஆர் இப்பாடலை தனது வசீகரமான குரலில் பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எல்லையற்ற ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வரவுள்ள வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகும் தீ தளபதி பாடல் யூடியூபில் புதிய சாதனை படைக்கத் தயாராகி வருகிறது. மாலை 4 மணிக்காக விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் இப்போதே கவுண்ட்டவுன் தொடங்கி சமூக வலைதளங்களை அதிர வைத்து வருகின்றனர்.
· Iamsandy_off