32 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் தென்மாவின் கொம்பத்து: ரசிகர்கள் உற்சாகம்!

32 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் தென்மாவின் கொம்பத்து: ரசிகர்கள் உற்சாகம்!

மலையாள திரையுலகின் மறக்க முடியாத காவியப் படங்களில் ஒன்றான 'தென்மாவின் கொம்பத்து' வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், இப்படத்தை நவீன 4K Remastered தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக விநியோக நிறுவனமான ஏபி இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால் மாணிக்கன் என்ற கதாபாத்திரத்திலும், ஷோபனா கார்த்தும்பி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தனர். மறைந்த பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்திற்கு தேசிய விருது பெற்றுத்தந்த கண்கவர் காட்சிகள், பெர்னி-இக்னேஷியஸ் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் இப்படத்தை ஒரு பொக்கிஷமாக மாற்றின. இப்போது டிஜிட்டல் முறையில் செப்பனிடப்பட்டு கூடுதல் பொலிவுடன் இப்படம் வெள்ளித்திரைக்கு வரவுள்ளது. வரும் அக்டோபர் 9 முதல் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. பல தலைமுறை சினிமா ரசிகர்களைக் கவர்ந்த இந்த எவர்கிரீன் காதலை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Apifilms

பழைய செய்திகள்