தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்': டப்பிங் பணிகள் துவக்கம்!
ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கி தனித்துவமான முத்திரை பதித்த தியாகராஜன் குமாரராஜாவின் புதிய படைப்பான 'பாக்கெட் நாவல்' (Pocket Novel) படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளன. பிஆர்ஓ டைமண்ட் பாபு எக்ஸ் தளத்தில் இந்த முக்கிய அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கன்னட இயக்குனர் ராஜ் பி ஷெட்டி மற்றும் கிஷோர் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தியாகராஜன் குமாரராஜாவின் டிடிகேஎஃப் நிறுவனம் தயாரித்து வருகிறது. திறமையான கலைஞர்கள் இணைந்திருப்பதால் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சினிமா ஆர்வலர்களால் உற்றுநோக்கப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'பாக்கெட் நாவல்' படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Idiamondbabu