தமிழகத்தில் திங்க் ஸ்டுடியோஸ் வெளியிடும் 'ராமாயணம்': இன்னும் 2 நாட்களில் ராவண தாண்டவம் ஆரம்பம்!
பெரும் பொருட்செலவில் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஏ மற்றும் பி சென்டர் திரையரங்குகளில் அதிகாலை காட்சிகளுடன் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திங்க் ஸ்டுடியோஸ் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக யாஷ் நடித்துள்ள தோற்றம் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இப்படத்திற்கான பிரத்யேக கட்-அவுட்டுகள் அமைத்து திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போது முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பிற்கான முன்பதிவு டிக்கெட் செயலிகளிலும் திரையரங்கு கவுண்டர்களிலும் மளமளவென நிரம்பி வருகிறது.
· Actor Kayal Devaraj