விஜய் மில்டனின் தொண்டர்படை சாப்டர் 1: பால் டப்பா பாடிய நந்தினி வீடியோ பாடல் வெளியீடு
பிரபல இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் 'தொண்டர்படை: காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் சாப்டர் 1' படத்தின் முதல் பாடலான 'நந்தினி' வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. யூத் சென்சேஷன் பால் டப்பா வரிகள் எழுதி பாடியுள்ள இப்பாடலுக்கு சாம் சி.எஸ். தாளம் போடும் இசையமைத்துள்ளார். சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட கல்லூரி விழாவில் மாணவர்களின் உற்சாகக் கரவொலிக்கு இடையே இப்பாடல் திரையிடப்பட்டது. வேடன் மற்றும் பால் டப்பாவின் அதிரடி மேடை நிகழ்வோடு நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுடன் கொண்டாடினர். ராஜ் தருண், சுனில், ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆக்ஷன் மற்றும் சமூகக் கருப்பொருளைக் கொண்ட விஜய் மில்டனின் இந்த புதிய படைப்பு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
· Actor Kayal Devaraj