'தொண்டர்படை' படத்தின் 'நந்தினி' பாடல்: 15 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூபில் அதிரடி சாதனை!
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தொண்டர்படை: காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் சேப்டர் 1' படத்தின் முதல் பாடலான 'நந்தினி' இணையத்தில் அதிரடி வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடல் யூடியூபில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தைக் கலக்கி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் தலைமுறை பாடகர் பால் டப்பா துள்ளலான வரிகளை எழுதி பாடியுள்ள இந்தப் பாடலுக்கு சாம் சி.எஸ் விறுவிறுப்பான இசையமைத்துள்ளார். வேடன் மற்றும் பால் டப்பாவின் குரல் சேர்க்கையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ராஜ் தருண், சுனில், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் மில்டனின் வழக்கமான ரா ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான லிரிக்கல் வீடியோ சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகப் பரவி வரும் நிலையில், விஜய் மில்டனின் புதிய ஆக்ஷன் களம் பெரிய திரையில் எப்போது வரும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj