விஜய் மில்டனின் 'தொண்டர்படை': பால் டப்பா பாடிய 'நந்தினி' பாடல் இன்று மாலை வெளியாகிறது!

விஜய் மில்டனின் 'தொண்டர்படை': பால் டப்பா பாடிய 'நந்தினி' பாடல் இன்று மாலை வெளியாகிறது!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தொண்டர்படை: காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் சேப்டர் 1' திரைப்படத்தின் முதல் பாடலான 'நந்தினி' இன்று மாலை 5:10 மணிக்கு வெளியாகவுள்ளது. துள்ளலான வைப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலை பிரபல பாடகர் பால் டப்பா எழுதிப் பாடியுள்ளார். ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில், வேடன் மற்றும் பால் டப்பாவின் அதிரடி காம்போ இணைந்துள்ளது. ராஜ் தருண், சுனில், ஆரி அர்ஜுனன், பரத், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ள இந்த லீடியோ பாடல் வீடியோ இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சரிகம சவுத் நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில் விஜய் மில்டன் இயக்கும் இந்த முதல் அத்தியாயம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் டீசர் வெளியீடு விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்