உலகநாயகன் கமல் பிறந்தநாளில் ‘தக் லைஃப்’ ரிலீஸ் தேதி டீசர்: ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, அவர் நடிப்பில் மணி ரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணையும் இப்படத்தில் சிலம்பரசன் டிஆர், திரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபசல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்ப அறிவிப்பு வந்த நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வருகிறது. பிறந்தநாள் பரிசாக வெளியாகும் இந்த டீசரில் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற ரிலீஸ் தேதி வெளிவரவுள்ளது. கமல் மற்றும் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
· Rkfi