அனைத்து தளங்களிலும் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து பட்டையைக் கிளப்பும் சில்லா சில்லா பாடல்!

அனைத்து தளங்களிலும் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து பட்டையைக் கிளப்பும் சில்லா சில்லா பாடல்!

அஜித் குமாரின் 'துணிவு' படத்தில் இடம்பெற்ற 'சில்லா சில்லா' பாடல் அனைத்து இசை மற்றும் வீடியோ தளங்களிலும் சேர்த்து 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்துள்ளது. 'சில்லா சில்லா ஃபீவர் அன்ஸ்டாப்பபிள்' என படக்குழுவினர் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளனர். அனிருத்தின் காந்தக் குரலில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவான இப்பாடல், யூடியூப் மற்றும் ரீல்ஸ் தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. வைசாக் எழுதிய எளிய மற்றும் துடிப்பான வரிகள் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் துணிவு படத்தின் முதல் பாடலுக்கே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த பாடல்களுக்கான எதிர்பார்ப்பும் இதனால் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

· Red Giant Movies

பழைய செய்திகள்