ஜெயிலர் வெற்றிக்குப் பின் கர்நாடகாவில் டைகர் நாகேஸ்வர ராவ்: ஏவி மீடியா வெளியீடு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படத்தை கர்நாடகாவில் பிரம்மாண்டமாக வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட ஏவி மீடியா கன்சல்டன்சி நிறுவனம், அடுத்ததாக ரவி தேஜா நடித்துள்ள 'டைகர் நாகேஸ்வர ராவ்' திரைப்படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. ஜெயண்ணா பிலிம்ஸ் மூலமாக இந்த வெளியீடு அமையவுள்ளதாக ஏவி மீடியா வெங்கடேஷ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரவி தேஜா பிரபல கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், ரேணு தேசாய், நூபுர் சனோன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எழுபதுகளின் காலகட்ட பின்னணியில் பரபரப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்திற்கு கர்நாடகா முழுவதும் திரையரங்குகளை ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரவி தேஜாவின் அதிரடி நடிப்பைக் காண ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
· Kollywood Ent