கலையரசன், ஆனந்தி இணையும் டைட்டானிக்: அக்டோபர் 16ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்
காதலும் கலகலப்பும் நிறைந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படமான 'டைட்டானிக்' வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் ராகவ் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள பாடல்கள் ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. காதல், நகைச்சுவை, மற்றும் சுவாரசியமான திருப்பங்களுடன் குடும்பத்தோடு ரசிக்கும் விதமாக உருவாகியுள்ள டைட்டானிக் கப்பல் அக்டோபர் 16 முதல் தியேட்டர்களில் பயணிக்கவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj