கலையரசன் - ஆனந்தி நடிப்பில் 'டைட்டானிக்': நவம்பர் 13 திரையரங்குகளில் ரிலீஸ்!
சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படமான 'டைட்டானிக்', வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜவேரி, காளி வெங்கட், மதுமிதா, ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நகைச்சுவை கலந்த காதல் கதையாக தயாராகியுள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக ரிலீசுக்குக் காத்திருந்த இப்படம் தற்போது வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருப்பது படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. காதல், எமோஷன், அலப்பறையான நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் விருந்தாக இப்படம் திரையரங்குகளில் அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ரொமாண்டிக் காமெடி கொண்டாட்டத்தைக் காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
· Actor Kayal Devaraj