மிஷ்கின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 'டிரெயின்': கேரளா தியேட்டர் உரிமையைக் கைப்பற்றிய ஐஎம்பி ஃபிலிம்ஸ்!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 'டிரெயின்': கேரளா தியேட்டர் உரிமையைக் கைப்பற்றிய ஐஎம்பி ஃபிலிம்ஸ்!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள 'டிரெயின்' (Train) திரைப்படத்தின் கேரள திரையரங்கு உரிமத்தை பிரபல விநியோக நிறுவனமான ஐஎம்பி ஃபிலிம்ஸ் (IMP Films) கைப்பற்றியுள்ளது. மேலும், இப்படம் வரும் டிசம்பர் 4 அன்று கேரளாவில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் மிஷ்கின் கூட்டணியில் முதல்முறையாக உருவாகும் படம் என்பதால் ஆரம்பத்திலிருந்தே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் ரயில் பின்னணியில் விறுவிறுப்பாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், ஐஎம்பி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் விரிவான வெளியீடு படத்தின் வசூலுக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· MalayalamReview

பழைய செய்திகள்