சசிகுமார், நரேன் இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது டிரைடென்ட் ஆர்ட்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பு!

சசிகுமார், நரேன் இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது டிரைடென்ட் ஆர்ட்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பு!

பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் 22-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. ஆர். ரவீந்திரன் மற்றும் சேத்தன் தியோலேகர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஹரி சந்தோஷ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அஞ்சலி நாயர், ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, ஹரீஷ் பெராடி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். பல திறமையான நடிகர்கள் இணைந்துள்ள இந்த மல்டிஸ்டாரர் படத்தின் படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கப்பட உள்ளதாகவும், படத்தின் தலைப்பு மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்