'96' திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்றார் த்ரிஷா: எம்.ஜி.ஆர் சிவாஜி அகாடமி விருது விழாவில் நெகிழ்ச்சி!

'96' திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்றார் த்ரிஷா: எம்.ஜி.ஆர் சிவாஜி அகாடமி விருது விழாவில் நெகிழ்ச்சி!

தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியமாக அமைந்த '96' திரைப்படத்தின் ஜானு கதாபாத்திரத்திற்காக நடிகை த்ரிஷா எம்.ஜி.ஆர் சிவாஜி அகாடமி விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்களை பிஆர்ஓ டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சி. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படம் உலகெங்கும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றது. குறிப்பாக மஞ்சள் நிற குர்தா அணிந்து த்ரிஷா வெளிப்படுத்திய ஜானு கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாபாத்திரங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது. தனது நடிப்பிற்கு கிடைத்த இந்த பெருமைமிகு அங்கீகாரத்திற்காக விருது மேடையில் த்ரிஷா படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் சக கலைஞர்களும் ரசிகர்களும் த்ரிஷாவுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்