சட்டம் என் கையில் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு: தயாரிப்பாளர் கயல் தேவராஜ் நெகிழ்ச்சி
நடிகர் சதீஷ் நடிப்பில் விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற சட்டம் என் கையில் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தனது தயாரிப்பு பயணத்தின் முதல் தொடக்கமாக அமைந்த இப்படத்தின் 2வது ஆண்டு நினைவை தயாரிப்பாளரும் நடிகருமான கயல் தேவராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான இப்படம் தனக்கு எப்போதும் மறக்க முடியாத ஒரு படைப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குநர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் இப்படத்தை கொண்டாடிய ரசிகர்களின் அன்பே இப்படத்தை திரைக்கு அப்பாலும் வாழ வைக்கிறது என்றும் கூறியுள்ளார். சதீஷின் மாறுபட்ட நடிப்புக்கும் நேர்த்தியான திரைக்கதைக்கும் பெயர் பெற்ற சட்டம் என் கையில் திரைப்படம், ஓடிடி தளங்களிலும் வெளியாகி பரவலான சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
· Actor Kayal Devaraj