பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் டைசன் நாயுடு பட முதல் பாடல் இன்று மாலை ரிலீஸ்
சாகர் கே சந்திரா இயக்கத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் அதிரடித் திரைப்படமான டைசன் நாயுடு படத்தின் முதல் பாடல் இன்று மாலை 7.20 மணிக்கு வெளியாகிறது. மதராசி ரப்பரு பொம்மா என்ற நாட்டுப்புற தாளப் பாடல் இன்று வெளிவரவுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் பகிரப்பட்டுள்ளது. பீம்ஸ் சிசிரோலியோ இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை நல்கொண்டா கத்தர் நர்சன்னா மற்றும் ரோகினி சொரத் பாடியுள்ளனர். போலாகி விஜய் நடனம் அமைத்துள்ளார். மாஸான நாட்டுப்புறக் குத்து பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம் சேர்க்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் இந்த பாடல் நிச்சயம் யூடியூப் மற்றும் ரீல்ஸ்களில் ரசிகர்களை ஆட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar