ஆக்ஷன் தெறிக்கும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 'டைசன் நாயுடு': மிரட்டலான டீசர் வெளியானது!
தெலுங்கு திரையுலகின் மாஸ் ஆக்ஷன் நாயகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'டைசன் நாயுடு' திரைப்படத்தின் மிரட்டலான டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'பீம்லா நாயக்' படத்தை இயக்கிய சாகர் கே சந்திரா இப்படத்தை இயக்கியுள்ளார். வெளியாகியுள்ள டீசரில் அதிரடி சண்டைக்காட்சிகள், கம்பீரமான உடலமைப்புடன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் அனல் பறக்கும் வசனங்கள் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. ஒரு அஞ்சாத கதாநாயகனின் போராட்டத்தை ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகள் கலந்து இயக்குநர் திரையில் கொண்டு வந்துள்ள விதம் டீசரிலேயே தெளிவாகத் தெரிகிறது. இப்படத்திற்கு பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளதுடன், டீசரின் ஒவ்வொரு காட்சியும் திரையரங்க அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு அக்மார்க் மாஸ் ஆக்ஷன் படத்தில் களமிறங்கியுள்ள சாய் ஸ்ரீனிவாஸுக்கு இப்படம் ஒரு முக்கியமான வெற்றியாக அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
· Ursvamsishekar