வாடிவாசல் தாமதத்திற்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் காரணமா: தாணு சொன்ன உண்மை பின்னணி!
'வாடிவாசல்' திரைப்படம் தாமதமானதற்கான உண்மையான காரணத்தையும், அதற்குப் பதிலாக 'அரசன்' திரைப்படம் உருவான பின்னணியையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சமீபத்திய பேட்டியில் விளக்கியுள்ளார். வாடிவாசல் படத்தின் காளை அனிமேஷன் பணிகளுக்காக லண்டனில் உள்ள நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமிருந்து தொடர்ச்சியாக நோட்டீஸ்கள் வந்ததால் சில நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே படத்தின் தயாரிப்புப் பணிகள் தாமதமானதாகவும் தாணு வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த நிதி சார்ந்த சிக்கல்கள் தயாரிப்பு நிறுவனத்தைப் பாதித்த நிலையில், தனக்காக இயக்குநர் வெற்றிமாறன் உடனடியாக 'அரசன்' திரைப்படத்தை இயக்க முன்வந்ததாகவும், அதற்காக வெற்றிமாறனுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தாணு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
· @_movietamil