வாடிவாசல் தொடங்குவது எப்போது: லண்டன் விஎப்எக்ஸ் காளை குறித்து தாணு பகிர்ந்த தகவல்!
சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் 'வாடிவாசல்' திரைப்படம் எப்போது தொடங்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மனம் திறந்து பேசியுள்ளார். மூன்று நாட்கள் நடைபெற்ற முன்னோட்டக் காட்சிப் படப்பிடிப்பின் போது காளை மாடு தாக்கியதில் ஒருவர் காலில் காயமடைந்து, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் காளையின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக முதலில் மும்பை வி.எஃப்.எக்ஸ் குழுவை வெற்றிமாறன் அணுகியதாகவும், ஆனால் அவர்களின் பணியில் திருப்தி ஏற்படாததால் லண்டன் நிறுவனத்திற்கு காட்சிகளை அனுப்பி மெருகேற்றியதாகவும் கூறினார். வெற்றிமாறனின் சிந்தனைக்கு ஏற்ப லண்டன் வி.எஃப்.எக்ஸ் குழுவினர் உருவாக்கிய காளையின் அசைவுகளும் எதிர்வினைகளும் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக அவர் நெகிழ்ந்துள்ளார். திரையில் சூர்யாவுடன் அந்தக் காளையைப் பார்க்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள் என்று உறுதியளித்துள்ள தயாரிப்பாளர் தாணு, இந்தத் திட்டத்தை மிகச் சரியாகத் திரைக்குக் கொண்டுவரக் குழுவினர் உழைத்து வருவதாகக் கூறினார்.
· @_movietamil