வானவேடிக்கை ட்ரெய்லர்: ஜெயம் ரவி மற்றும் ஆர்யா வெளியிடுகிறார்கள்

வானவேடிக்கை ட்ரெய்லர்: ஜெயம் ரவி மற்றும் ஆர்யா வெளியிடுகிறார்கள்

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள 'வானவேடிக்கை' திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லரை முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து இன்று மாலை 5 மணிக்கு சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கேப்டன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்‌ஷன் திரைப்படத்தை எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் முன்னணி இயக்குநர் மோகன் ராஜா இப்படத்தின் மூலம் முதன்முறையாக திரையில் வில்லனாக களமிறங்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் கம்பேக் திரைப்படமாக இப்படம் உருவாவதால் திரையுலகினரும் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை வெளியாகவுள்ள இந்த டிரெய்லர் படத்திற்கான ஆரம்பகட்ட எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்