100 மில்லியன் பார்வைகளைக் கடந்து வாத்தி கம்மிங் சாதனை: மாஸ்டர் ப்ரோமோ ரிலீஸ்
மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளதாக இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். இத்துடன் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் கானா பாலசந்தர் மற்றும் அனிருத் இணைந்து பாடிய இந்த பாடலின் துள்ளலான இசை உலகளவில் வைரலானது. குறிப்பாக தளபதி விஜய் ஆடிய தோள்பட்டை அசைவு நடனம் சமூக வலைத்தளங்களில் பெரும் அலையாக உருவெடுத்து பல பிரபலங்களையும் ஆட வைத்தது. தற்போது படம் திரைக்கு வர சில நாட்களே உள்ள நிலையில், வெளியிடப்பட்டுள்ள மாஸ்டர் முதல் ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. திரையரங்குகளில் வாத்தி ரைடுக்கு விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
· Philoedit