வைகைப்புயல் வடிவேலுவின் ரீ-என்ட்ரி: 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் முதல் பார்வையை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'வந்துட்டான்யா வந்துட்டான்யா' என்ற பிரசித்தி பெற்ற வசனத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தலைசிறந்த நகைச்சுவை கலைஞரான வடிவேலுவின் பிரத்யேக உடல்மொழியுடன் கூடிய இந்த போஸ்டர் வெளியான உடனே இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு திரையில் தோன்றி சிரிக்க வைக்கவுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
· Lyca Productions