வைபவ் நடிக்கும் 'மணிகண்டா': பக்தி கலந்த கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

வைபவ் நடிக்கும் 'மணிகண்டா': பக்தி கலந்த கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தந்திரா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் 'மணிகண்டா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆன்மீகப் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. "ஐயப்பனைக் காண வாருங்கள்" என்ற பக்தி முழக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட சென்னை 28 படக்குழுவினர் இப்போஸ்டரைப் பகிர்ந்து வைபவுக்கு தங்களது உற்சாகமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சாமி சரணம் என்ற ஆன்மீக உணர்வுடன் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தி பின்னணியில் வைபவின் வழக்கமான எதார்த்த நகைச்சுவை கலாட்டாக்களுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் அடுத்தகட்ட ரிலீஸ் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்