டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகளை மையமாகக் கொண்டு உருவாகும் 'பீம் அண்ட் ராவ்': வசிஷ்ட சிம்ஹாவின் புதிய படம் அறிவிப்பு!
நீதி, சமத்துவம் மற்றும் தேசப்பற்றை முன்வைத்து டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளை மையப்படுத்தி உருவாகும் புதிய திரைப்படமான 'பீம் அண்ட் ராவ்' (BHEEM and RAO) படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்பட அறிவிப்பை மக்கள் தொடர்பாளர் யுவராஜ் மற்றும் படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகர் வசிஷ்ட சிம்ஹா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேச்சர் லார்ட் புரொடக்ஷன் (Nature Lord Production) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'த ரெவல்யூஷன் ஃபார் எ சொல்யூஷன்' (The Revolution for a Solution) என்ற அழுத்தமான வாசகமும் தலைப்பு போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. சமத்துவம் பேசும் சமூகப் பின்னணியில் அமையவுள்ள இக்கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாஹுதீன் என்.எஸ், எம்.பி. சாம்ராட் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். சமூக விழிப்புணர்வு மற்றும் அதிரடி திருப்பங்களுடன் தயாராக உள்ள இப்படத்தின் முழுமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
· Actor Kayal Devaraj