50 லட்சம் பார்வைகளைக் கடந்த 'கல்லூறும்' பாடல்: சியான் விக்ரமின் 'வீர தீர சூரன்'!
சியான் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் உருவான 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் மனதைத் தொடும் காதல் பாடலான 'கல்லூறும்' யூடியூபில் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. தயாரிப்பாளர் ரியா ஷிபு இந்த இனிப்பான தகவலைப் பகிர்ந்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல் ரசிகர்களின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. காளி கதாபாத்திரத்தில் விக்ரமின் அமைதியான காதல் பார்வையும், துஷாராவின் எதார்த்தமான நடிப்பும் பாடலுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளன. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இசைப் பிரியர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
· Riyashibu_