'இது வேற லெவல் படம்': கேரள எப்.டி.எப்.எஸ் காட்சியில் பட்டையைக் கிளப்பும் வீர தீர சூரன்!
சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் கேரளாவில் வெளியான முதல் நாளின் முதல் காட்சியிலேயே (FDFS) ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது என்று பி.ஆர்.ஓ பிரதீஷ் சேகர் உற்சாகமாக தெரிவித்துள்ளார். 'இது வேற லெவல் படம்' என கேரள திரையரங்குகளில் இருந்து வெளிவரும் சினிமா ரசிகர்கள் கொண்டாட்ட ஆரவாரத்துடன் கூறி வருகின்றனர். விக்ரமின் அசாத்திய ஆக்ஷன் நடிப்பு, எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான தோற்றம் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடுவின் அழுத்தமான நடிப்பு ஆகியவை மலையாள சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டைப் போன்றே கேரளாவிலும் சீயான் விக்ரமுக்கு மிகப்பெரிய தீவிர ரசிகர் வட்டம் உள்ள நிலையில், முதல் காட்சியிலேயே கிடைத்துள்ள இந்த அதிரடி நேர்மறை விமர்சனங்கள் படத்திற்கு அங்கு மிகப்பெரிய வசூல் சாதனையை அமைத்துக் கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கணித்துள்ளனர். மேலும் கூடுதல் காட்சிகளும் அங்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன.
· Riyashibu_