வீர தீர சூரன் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம்: ஃபார்ஸ் ஃபிலிம் நிறுவனம் பிரம்மாண்டமாக கைப்பற்றியது!

வீர தீர சூரன் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம்: ஃபார்ஸ் ஃபிலிம் நிறுவனம் பிரம்மாண்டமாக கைப்பற்றியது!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் சர்வதேச வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமத்தை முன்னணி நிறுவனமான ஃபார்ஸ் ஃபிலிம் (Phars Film) கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பாளர் ரியா ஷிபு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அகமது கோல்சின் மற்றும் பிரதீப் சி.எஸ் தலைமையிலான ஃபார்ஸ் ஃபிலிம் நிறுவனம் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் இப்படத்தை மிகப்பெரிய எண்ணிக்கையிலான திரைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. மேலும் பிற சர்வதேச மொழிகளிலும் படத்தை கொண்டு செல்வது குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பு சூசகமாக கூறியுள்ளது. சர்வதேச அளவில் சீயான் விக்ரமின் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால், இந்த சர்வதேச விநியோக ஒப்பந்தம் படத்தின் வர்த்தக மதிப்பை வெளிநாட்டு சந்தையில் மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளதுடன், உலகளாவிய தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

· Riyashibu_

பழைய செய்திகள்