மார்ச் 27 முதல் தியேட்டர்களில் சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்': அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!
சீயான் விக்ரம் மிரட்டலான 'காளி' கதாபாத்திரத்தில் நடிக்கும் 'வீர தீர சூரன்' திரைப்படம் வரும் 2025 மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று பட தயாரிப்பாளர் ரியா ஷிபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'சித்தா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கும் இப்படத்தை எச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த எதிர்பார்ப்பு தீவிரமாக நிலவி வந்த சூழலில், தற்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் அசாத்திய நடிப்பில் உருவாகியுள்ள இந்த அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், கோடை விடுமுறை கொண்டாட்டமாக ரசிகர்களுக்கு திரையரங்குகளில் மறக்க முடியாத மாபெரும் திரை விருந்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான விளம்பரப் பணிகளும் விரைவில் முழுவீச்சில் தொடங்கவுள்ளன.
· Riyashibu_